Monday, 12 March 2012

பணம்

உனக்காக வெகு தூரம் வந்துவிட்டேன்
வேரறுந்த மரமகிவிட்டேன்
கருவறையில் வைத்து காத்தவளையும்
வருவாயால் என்னை வளர்த்தவனையும்
இதயத்தில் என்னை தைத்தவளையும்
சாயும்போதெல்லாம் தோள் தந்தவனையும்
இமைக்காமல் ரசித்த இயற்கையையும்
ஆறு ஏழு ஆண்டு கால ஆயுளையும்
இன்னும் எத்தனை எத்தனயோ
இறந்த என் உறக்கம் உள்பட
இழக்க இனிமேல் எதுவும் இல்லை
உன்னை தவிர ...

No comments:

Post a Comment