இந்த போரில்
உதிர்ந்தது உறவு
எறி(ரி)ந்தது நட்பு
புதைந்தது காதல்
இந்த போராட்டத்தால்
நகராமல்
மண்டியிட்டு
சண்டித்தனம் செய்கிறது
என் கற்பனை குதிரை கூட
காசை பாத்தா
கண்ணு மண்ணு தெரியாது
உறவினர்கள் ஒன்றுகூடி வழங்கிய
பாராட்டுபத்திரம் வேறு .
சக போராளி
தோற்கும்போதெல்லாம்
ஏனோ என்னையும்
எதிரியாய் எண்ணுகிறான்
மனக்காயங்களுக்கு
மருந்திடும் நாட்களுக்குகூட
மருத்தவரிடம் மன்றாடி நிற்கிறேன்
விடுப்பு தடுப்புசீட்டு வேண்டி
என்னை நானே
அந்நிய நிறுவனத்திற்கு
அடிமையக்கவா
அடமானம் வைக்கவா
இந்த போராட்டம்.
ஈட்டிய லட்சங்களுக்காய்
இழந்தவை கோடி.
உதிர்ந்தது உறவு
எறி(ரி)ந்தது நட்பு
புதைந்தது காதல்
இந்த போராட்டத்தால்
நகராமல்
மண்டியிட்டு
சண்டித்தனம் செய்கிறது
என் கற்பனை குதிரை கூட
காசை பாத்தா
கண்ணு மண்ணு தெரியாது
உறவினர்கள் ஒன்றுகூடி வழங்கிய
பாராட்டுபத்திரம் வேறு .
சக போராளி
தோற்கும்போதெல்லாம்
ஏனோ என்னையும்
எதிரியாய் எண்ணுகிறான்
மனக்காயங்களுக்கு
மருந்திடும் நாட்களுக்குகூட
மருத்தவரிடம் மன்றாடி நிற்கிறேன்
விடுப்பு தடுப்புசீட்டு வேண்டி
என்னை நானே
அந்நிய நிறுவனத்திற்கு
அடிமையக்கவா
அடமானம் வைக்கவா
இந்த போராட்டம்.
ஈட்டிய லட்சங்களுக்காய்
இழந்தவை கோடி.
No comments:
Post a Comment