Sunday, 13 May 2012

நீயும் நானும் ஒண்ணுதானே.

கருவறை விட்டு வந்த பின்னும்
என் உணர்வுகளுக்கு உயிர் வரும் வரை
பசி,தூக்கம், பினி உணர்ந்து
அன்னிசையை செயல்பட்டு
அரவணைத்''தாய்''

"அ ஆ"
உன் வாய் வழி
அறிமுகம் வந்ததனால்தானே
என் தாய் மொழியானது.

என் வெற்றி உன் மகிழ்ச்சி
என் தோல்வி உன் துக்கம்
அப்படி பார்த்தால்
உன்னை
மகிழவைத்ததைவிட
வேதனைப்படுத்தியதே
அதிகமாய் இருந்திருக்கும்.

உனக்காய் நான்
உணர்வுகளை உணர
நேரம் செலவிட்டதில்லை
மனநிலை அறிந்து
செயல்பட்டதில்லை
மாறக
என் உணர்வுகளை உணரவும்
மனநிலை அறியவுமே
மாதவம் செய்கிறாய்.

மன்னிப்புகோரியோ
நன்றி சொல்லியோ
உன்னையும் என்னையும்
இருவர்களாக்கும்
எண்ணம் ஏதும் எனக்கில்லை

1 comment: